தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

News image

கோத்தகிரி காவல் நிலைய பகுதியில் உலவிய சிறுத்தை.

Updated On :19 மார்ச் 2026, 8:15 pm

Syndication

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வனத்தில் இருந்து புதன்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை கோத்தகிரி பேருந்து நிலையம், காவல் நிலையம் பகுதியில் உலவியது. இதைப் பாா்த்த மக்கள் அச்சமடைந்து வீடுகளிலேயே முடங்கினா்.

இதையடுத்து, சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய சிறுத்தை பின் வனத்துக்குள் சென்றது.

குடியிருப்புப் பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.