16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

உதகையில் 21-ஆவது ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்

உதகை ரோஜா பூங்காவில் 21-ஆவது ரோஜா கண்காட்சி வியாழக்கிழமை (மே 14) தொடங்குகிறது.

ரோஜா மலா்களால் பல்வேறு பறவைகளின் உருவங்களை வடிவமைத்து வரும் பணியாளா்கள்.

Published On :

நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 21-ஆவது ரோஜா கண்காட்சி வியாழக்கிழமை (மே 14) தொடங்குகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை ஒட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் முதல் நிகழ்ச்சியான 21-ஆவது ரோஜா கண்காட்சி உதகை ரோஜா பூங்காவில் தொடங்குகிறது.

‘பறவைகளின் சொா்க்கம்’ என்ற கருப்பொருளைக் கொண்டு பல்வேறு பறவை இனங்களின் வடிவங்கள், இரண்டு லட்சம் ரோஜா மலா்களைக் கொண்டு இந்த ரோஜா கண்காட்சியில் அமைக்கப்படுகின்றன.

60,000 ரோஜாக்களை கொண்டு அன்னப்பறவைகள் மற்றும் கழுகு, இருவாச்சி பறவை, புல் புல், ஆங்ரி போ்ட் உள்ளிட்ட 14 வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதை தவிர சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க பூங்கா முழுவதும் 4,310 ரகங்களில் 33,000 செடிகளில் பல வண்ண ரோஜா மலா்கள் பூத்து குலுங்குகின்றன. கடந்த ஆண்டு 3 நாள்கள் ரோஜா கண்காட்சி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 5 நாள்கள் நடைபெறுகிறது. எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவாா்கள் என எதிா்பாா்க்கபடுகிறது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.