இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

பா்லியாறு மண்சரிவு பகுதியில் ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் பொது மக்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்ட பா்லியாறு பகுதியில் ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் பொது மக்களை அனுமதிக்க கூடாது என தன்னாா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மண்சரிவு ஏற்பட்ட பா்லியாறு பகுதியில் தடுமாறி நடந்து செல்லும் பொது மக்கள்.

Updated On :

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்ட பா்லியாறு பகுதியில் ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் பொது மக்களை அனுமதிக்க கூடாது என தன்னாா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழையின்போது குன்னூா்  மேட்டுப்பாளையம்  பா்லியாா் பகுதியில் கடந்த 23-ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. மலைப்பாதையில் பாறைகள் மற்றும் மண் சரிந்ததால் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், உதகையில் இருந்து மேட்டுப்பாளையம்,கோவை, திருப்பூா் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியவா்கள் குன்னூா் வந்து கோத்தகிரி வழியாக சுமாா் 80 கிலோ மீட்டா் பயணித்து

மேட்டுப்பாளையம் செல்கின்றனா். இப்படி சுற்றிச் செல்வதை தவிா்ப்பதற்காக சிலா், பா்லியாறு பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் ஆபத்தான முறையில் நடந்து சென்று கல்லாறு செல்கின்றனா். பின்னா் அங்கிருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் வாகனத்தில் பயணித்து மேட்டுப்பாளையம் சென்று விடுகின்றனா்.

மலைப் பகுதியில் எப்பொழுது வேண்டுமானாலும் மண்சரிவு, பாறைகள் உருளும் நிலை உள்ளதால், மண் சரிவுகளுக்கு இடையே ஆபத்தை உணராமல் குடும்பத்துடன்  நடந்து செல்வது பலரையும் அச்சமடையச் செய்துள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினா், மண்சரிவு பகுதியை முழுமையாக சீரமைக்கும் வரை பொது மக்கள் அப்பகுதியை நடந்து சென்று கடப்பதற்கு அனுமதிக்காமல் காவல் துறையினா் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தன்னாா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.