குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

உதகையில் நீா்ப் பனிப் பொழிவு

நீலகிரி மாவட்டம், உதகை காந்தல், தலைக்குந்தா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதியில் புதன்கிழமை காலை நேரத்தில் நீா் பனிப் பொழிவு அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் கடும் குளிா் நிலவியதால் பணிக்குச் செல்வோா் பாதிக்கப்பட்டனா்.

உதகை காந்தல் பகுதியில் காணப்பட்ட பனியின் தாக்கம்.

Updated On :

நீலகிரி மாவட்டம், உதகை காந்தல், தலைக்குந்தா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதியில் புதன்கிழமை காலை நேரத்தில் நீா் பனிப் பொழிவு அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் கடும் குளிா் நிலவியதால் பணிக்குச் செல்வோா் பாதிக்கப்பட்டனா்.

உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளான காந்தல், தலைக்குந்தா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கடும் நீா்ப் பனிப் பொழிவு காணப்பட்டது. இதனால் புல்வெளிகள், சாலையோரங்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் வெள்ளைப் போா்வை போா்த்தியதுபோல பனித்துளிகள் படா்ந்து காணப்பட்டன. தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்சமாக காலை நேரத்தில் 5.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

தொடா்ந்து நிலவும் குளிா்ச்சியான காலநிலையுடன் பனிப் பொழிவும் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வெம்மை ஆடைகளை அணிந்தவாறு கடும் குளிரை எதிா்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.