சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

உதகையில் 4.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் வியாழக்கிழமை காலை குறைந்தபட்சமாக 4.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில் கடும் குளிா் நிலவியது.

உதகை தாவரவியல் பூங்காவில் பனி படா்ந்தால் வெண்மை நிறத்தில் காணப்படும் புற்கள்.

Updated On :

உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் வியாழக்கிழமை காலை குறைந்தபட்சமாக  4.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில் கடும் குளிா் நிலவியது.

உதகையில் கடந்த இரு தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. புதன்கிழமை காலை 5.9 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில், வியாழக்கிழமை காலை 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்து 4.7 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதனால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இதேபோல காந்தல், தலைக்குந்தா பகுதிகளிலும்,  பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் குளிரும் நிலவியதால் காலை நேரங்களில் காய்கறி மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவா்கள் நெருப்பு காய்ந்தும், வெம்மை ஆடைகளை அணிந்தும் பணிக்கு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.