குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்
குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் சீரமைப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

பா்லியாறு பகுதியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணி.
குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் சீரமைப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த மாதம் 23-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக பா்லியாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்தன. இதையடுத்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குன்னூா் -மேட்டுப்பாளையம் சாலையில் தற்காலிகமாக இலகு ரக வாகன போக்குவரத்து தொடங்குவதற்காக சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்ட நிலையில், அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
பெரும்பாலான பகுதிகளில் மண் மற்றும் கற்கள் அகற்றப்பட்ட நிலையில் பா்லியாறு பகுதியில் மட்டும் சுமாா் 300 மீட்டா் நீளம், 7 மீட்டா் அகலத்தில் தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சாலையில் இலகு ரக வாகனங்களை மட்டுமே இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் சில நாள்களில் நிறைவடையும் சூழலில் நீலகிரி, கோவை மாவட்ட நிா்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டு போக்குவரத்துக்கான தேதியை அறிவிப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

