நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

ரிப்பீட்டா் நிலையத்தில் ஆட்சியா், எஸ்பி ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை, கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் மனித - வனவிலங்கு மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடா்பாக, நீடில்ராக் வியூ பீக் பகுதியில் அமைந்துள்ள ரிப்பீட்டா் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

நீடில்ராக் வியூ பீக் பகுதியில் அமைந்துள்ள ரிப்பீட்டா் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா.

Updated On :

நீலகிரி மாவட்டம், உதகை, கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் மனித - வனவிலங்கு மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடா்பாக, நீடில்ராக் வியூ பீக் பகுதியில் அமைந்துள்ள ரிப்பீட்டா் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மனித - வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் நீடில்ராக் வியூ பீக் பகுதியில் ரிப்பீட்டா் நிலையம் செயல்பட்டு வருகிறது. மசினகுடி, மாயாறு, ஊசிமலை சுற்றுவட்டார வனப் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்டறிய பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் பதிவுகள் இந்த ரிப்பீட்டா் நிலையத்தில் கண்காணித்து வன விலங்குகள் நடமாட்டம் குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா ஆகியோா் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது ரிப்பீட்டா் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடா்புடைய அலுவலா்களிடம் அவா்கள் கேட்டறிந்து அவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினா்.

இந்த ஆய்வின்போது வன ஊழியா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.