
குன்னூர் மலைப் பாதையில் கார் மீது பாறை விழுந்து ஒருவர் பலி!
குன்னூர் மலைப் பாதையில் கார் மீது பாறை விழுந்து விபத்துக்குள்ளானது பற்றி...

குன்னூர் மலைப் பாதையில் கார் மீது பாறை விழுந்து விபத்து - Dinamani
மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை பாதையில் கார் மீது பாறை விழுந்து கணவர் பலியான நிலையில், மனைவி படுகாயமடைந்தார்.
கோவை, நீலகிரி ஆகிய மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அருவங்காடு ஜெகதளா பகுதியைச் சேர்ந்த பெள்ளி மகன் கிருஷ்ணமூர்த்தி (65). இவர் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தேவகி (54), மகன் கார்த்தி (29), உறவினர்கள் இந்திரா (68), சிந்தாமணி (62) ஆகியோர் கோவை மாவட்டம், சாய்பாபா காலனியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு உடல் நலம் விசாரிக்க காரில் வந்துள்ளனர்.
இவர்களின் கார் இன்று காலை மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை பாதையில் பர்லியார் கீழ்ப்பகுதியில் வந்தபோது, பாறை ஒன்று உருண்டு காரின் பின் பக்கம் விழுந்தது. இதில், காரின் பின்பக்கம் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி தேவகி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கிருஷ்ணமூர்த்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கிருஷ்ணமூர்த்தி
படுகாயமடைந்த தேவகி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Summary
One killed after a rock falls on a car on the Coonoor hill road!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






