சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

தொடா் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :

வார விடுமுறை, ஆயுத பூஜை தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்பட்டனா்.

நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனா்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச் சிகரம், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனா். 

இந்நிலையில் ஆயுத பூஜை, வார விடுமுறை என தொடா் விடுமுறை காரணமாக உதகையில் பிரசித்தி பெற்ற படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக மிதி படகு, மோட்டாா் படகுகளில் படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனா். இதேபோல பூங்காவில் பூத்துள்ள வண்ண மலா்கள் மற்றும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.