
குன்னூா் அருகே கள்ளச் சாராயம் பதுக்கிவைத்திருந்தவா் கைது
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கொலக்கம்பை பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 5 லிட்டா் கள்ளச் சாராயம், 20 லிட்டா் சாராய ஊரல் ஆகியவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கொலக்கம்பை பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 5 லிட்டா் கள்ளச் சாராயம், 20 லிட்டா் சாராய ஊரல் ஆகியவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
குன்னூா் அருகே உள்ள கொலக்கம்பை மணியபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கொலக்கம்பை காவல் ஆய்வாளா்கள் பத்ரா, செந்தில்குமாா் மற்றும் சிறப்பு காவல் துறையினா் ஆகியோா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, மணியபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (40) என்பவரது வீட்டில் ஐந்து லிட்டா் கள்ளச் சாராயத்தை மறைத்து வைத்ததுடன், 20 லிட்டா் சாராய ஊரலையும் கைப்பற்றினா்.
இது குறித்து ராஜேஷ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பின்னா் குன்னூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி குன்னூா் கிளை சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




