திருமூர்த்தி அணையிலிருந்து 4-ஆவது மண்டல பாசனத்துக்கு அக்.12-இல் தண்ணீர் திறப்பு
திருமூர்த்தி அணையில் இருந்து நான்காவது மண்டல பாசனத்திற்கு அக்டோபர் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
திருமூர்த்தி அணையில் இருந்து நான்காவது மண்டல பாசனத்திற்கு அக்டோபர் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் திருமூர்த்தி அணை மூலமாக 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் நீர் இருப்பை பொறுத்து, நான்கு மண்டலங்களுக்கு பல சுற்றுக்களாகப் பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
மூன்றாவது மண்டல பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது. நான்காவது மண்டல பாசனத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சுற்று தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பருவமழை பொய்த்து போனதாலும், காண்டூர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதாலும் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், வரும் 24-ஆம் தேதிக்கு முன்பாக காண்டூர் கால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டு, 24-ஆம் தேதி காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. அக்டோபர் 12ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நான்காவது மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
நான்காவது மண்டல பாசனத்துக்கு இந்த முறை, இரண்டு சுற்றுத் தண்ணீர் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை பி.ஏ.பி., அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பி.ஏ.பி. திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம், உறுப்பினர்கள், கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் உள்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

