மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம்

தேர்வு நேரத்தில் எஸ்.எஸ்.ஏ சார்பில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்குளாகி வருவதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.

Updated On :

தேர்வு நேரத்தில் எஸ்.எஸ்.ஏ சார்பில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்குளாகி வருவதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.

1-ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, 19-ஆம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்குத் தர வேண்டிய சூழலில், ஆசிரியர்கள் பயிற்சிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஏ. சார்பில் கணித உபகரணப் பயிற்சி, 9, 10, 11-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.  இப்பயிற்சி இரண்டாம் கட்டமாக, 14, 15, 16-ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதேபோல், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15, 16, 18-ஆம் தேதிகளிலும், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15-ஆம் தேதியும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தேர்வு நெருங்கி வரும் நிலையில் பள்ளிகளில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பயிற்சிக்குச் சென்று விடுகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது.

எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆண்டுக்கு, 20 நாள்கள் தர வேண்டிய பயிற்சியை ஒரே சமயத்தில் பருவத் தேர்வு நேரத்தில் அவசரமாக அளிப்பது கேள்விக்குறியாக உள்ளது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.