இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

சம்பளம் நிலுவை: அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

சம்பளம் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On :

சம்பளம் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

   திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில், காவல், சுகாதாரம், குடிநீர்க் குழாய் பராமரிப்பு, சமையல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் 114 பேர் சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையாம்.

இந்நிலையில், சம்பளம் நிலுவையை பெற்றுத் தர வலியுறுத்தி, ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமியிடம் மனு அளித்தனர். 

   நிலுவைச் சம்பளத்தை உடனே கொடுப்பதுடன், சம்பளம் வழங்கும் தேதியை நிர்ணயம் செய்யவேண்டும். பி.எப்., இஎஸ்ஐ பிடித்தங்களுக்கு ரசீது வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு வழங்க வேண்டும்.

  குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

  மனு அளித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள், திருப்பூர் அரசு தலைமை மருத்துமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம், ஒப்பந்ததாரர் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வரும் 29-ஆம் தேதி சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.