மக்களைத் தேடி வருவாய் திட்ட முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் கிராமங்களில் மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் கிராமங்களில் மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:
மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் கிராமங்களில் நவம்பர் 3-ஆம் தேதி மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, திருப்பூர் வடக்கு வட்டம், நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், திருப்பூர் தெற்கு வட்டம், உகாயனூர், பொல்லிகாளிபாளையம் சமுதாய நலக்கூடம், அவிநாசியில் புஞ்சை தாமரைக்குளம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊத்துக்குளியில் அணைப்பாளையம், அருகம்பாளையம் ஊராட்சி அலுவலகம், பல்லடத்தில், பூமலூர் பள்ளிபாளையம் ஊராட்சி அலுவலகம், தாராபுரத்தில், புதுப்பை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், காங்கயத்தில் வீரசோழபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி அலுவலகம், உடுமலையில் குருவப்பநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், மடத்துக்குளத்தில் துங்காவி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரைஇந்த முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...