யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஏபிவிபி அமைப்புக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

ஏபிவிபி மாணவர் அமைப்பைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:52 am

DIN

ஏபிவிபி மாணவர் அமைப்பைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு ஏபிவிபி மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அக்கட்சியின் கொடியையும், கேரள முதல்வர் பினராயி விஜயன் உருவப் படத்தையும் ஏபிவிபி அமைப்பினர் எரித்ததாகக் கூறி,  அதற்குக் கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி, திருப்பூரில் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன் தலைமை வகித்தார்.
இதில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன்,  மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் உள்ளிட்டோர் ஏபிவிபி அமைப்பினருக்குக் கண்டனம் தெரிவித்தனர். பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாநிலக் குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், என்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உடுமலையில்...: ஏபிவிபி மாணவர் அமைப்பைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  மத்தியப் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்து பேசியதாவது:
   சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தின் முன்பாக கட்சிக் கொடியையும்,  கேரள முதல்வர் பினராயி விஜயன் உருவப்படத்தையும் எரித்து பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் அராஜக செயலை செய்திருக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
   இதில், பாஜகவைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  நகரக் குழு உறுப்பினர் கே.தண்டபாணி, விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   இதேபோல, உடுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளபாளையத்தில் ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் தலைமையிலும், குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெதப்பம்பட்டியில் மாவட்டக் குழு உறுப்பினர் வெ.ரங்கநாதன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.