யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இலவச மருத்துவ முகாம்

பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழாவையொட்டி இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:10 am

DIN

பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழாவையொட்டி இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.எம்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். திருப்பூர் பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர்  கோ.சண்முகவேல் முன்னிலை வகித்தார். செயலாளர் பி.எஸ்.செல்வராஜ் வரவேற்றார். முகாமை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் துவக்கிவைத்தார்.
முகாமில்,   கூட்டுறவு வங்கி மருத்துவர் ஜி.யுவராஜ், செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் எம்.சுதர்சன் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் 210 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில்,  பல்லடம் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஏ.சித்துராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன்,  நகராட்சி முன்னாள் துணைத் தலைவர்கள் சூ.தர்மராஜன், வைஸ் பி.கே.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வங்கி உதவி செயலாளர் ஏ.ஜெயபாலன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.