தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

கிராமப்புறக் கல்லூரிகளில் உடுமலை அரசுக் கல்லூரி தேசிய அளவில் முதலிடம்

கிராமப்புறக் கல்லூரிகளில் உடுமலை அரசு கலைக் கல்லூரி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:02 am IST

கிராமப்புறக் கல்லூரிகளில் உடுமலை அரசு கலைக் கல்லூரி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (ஙஏதஈ) 2018-ஆம் ஆண்டுக்கான தேசியத் தரவரிசை மதிப்பீட்டுப் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. 
இதில், உடுமலை அரசு கலைக் கல்லூரி அகில இந்திய அளவில் கிராமப்புறக் கல்லூரிகளில் முதலிடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதலிடத்தையும், திருப்பூர் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி தேசிய அளவிலான கலை, அறிவியல் கல்லூரிகளில் இக்கல்லூரி 71-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
கற்றல் கற்பித்தலில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் மாணவர் விகிதம், பேராசிரியர்களின் பணி அனுபவம், அவர்களது ஆய்வுப் பணிகள்,  ஆய்வுக் கட்டுரை வெளியீடு, நூலாக்கம், மாணவர் தேர்ச்சி விகிதம், மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பி ன்புலம், மாற்றுத் திறனாளி மாணவர்கள் சேர்க்கை, போட்டிச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களில் தமிழகத்தில் இருந்து 36 கல்லூரிகள் இடம் பிடித்து ள்ளன. இதில் ஐந்து அரசு கல்லூரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், உடுமலை அரசு கலைக் கல்லூரி 4-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
சிறப்பிடம் பெற்றதற்காக கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா, கோவை மண்ட லக் கல்லூரிக் கல்வி இயக்குநர் ச.கலா, கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முதல்வர் (பொறு) ச.பொன்முடி மற்றும் பேரா சிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரை பாராட்டினர். 
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் கலந்துகொள்ள கல்லூரி நிர்வாகத்தினருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.