பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

திருப்பூர் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் தம்பதி ஆஜர்

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் தம்பதி திருப்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:20 am IST

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் தம்பதி திருப்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில்  2015 மே 4ஆம்  தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.ரூபேஷ், இவரது மனைவி சைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில்,  ரூபேஷ், சைனா இருவரும் திருப்பூரில் தங்கியிருந்தபோது போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாநகர வடக்கு போலீஸார் இந்தத் தம்பதி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் மாவோயிஸ்ட் தம்பதி ரூபேஷ், சைனா ஆகியோர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தம்பதியர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.