5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்: மில் தொழிலாளர் சங்கம்

திருப்பூர் மாவட்ட மில் தொழிலாளர் சங்க (ஏஐடியூசி) 3ஆவது மாவட்ட மாநாட்டில் தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Updated On :

திருப்பூர் மாவட்ட மில் தொழிலாளர் சங்க (ஏஐடியூசி) 3ஆவது மாவட்ட மாநாட்டில் தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு பி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். 
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு ரூ. 421 வீதம் நிர்வாகங்கள் வழங்க வேண்டும். சுமங்கலித் திட்டம் என்ற பெயரிலான  நவீன கொத்தடிமைத் திட்டத்தை ஒழிக்க  வேண்டும். 
தொழிலாளர் நலச் சட்டங் ளை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். ஆகியவை முறைப்படி கிடைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
இதில்,  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக பி.சுப்பிரமணியம், பொதுச் செயலாளராக வி.சௌந்திரராஜன், பொருளாளராக கே.நடராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எஸ்.சின்னச்சாமி, வட்டாரச் செயலாளர் கே.எஸ்.ரணதேவ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.