திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் நடைபெறும் சோடஷ மகாலட்சுமி மகா யாகத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை 1008 கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்து முன்னணி சார்பில் சோடஷ மகாலட்சுமி மகா யாக வேள்வி கணபதி ஹோமத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 25) நிறைவடைகிறது.
இரண்டாம் நாளான திங்கள்கிழமை, சோடஷ மகாலட்சுமி மகா யாக முதற் கால யாகம் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் வட தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. யாகத்தை திருக்கழுகுன்றம் அன்புச்செழியன் ஸ்வாமிகள் நடத்தினார்.
1008 கோமாதா பூஜையை கொங்குநாடு முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் ஆகியோர் தொடக்கிவைத்தனர். கோ பூஜையை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் நடத்திவைத்தார். கன்னியாகுமரி வெள்ளிமலை விவேகானந்தா ஆஸ்ரமத்தின் தலைவர் சுவாமி சைதன்யானந்தர் ஆசியுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, அஹோபில மடத்தின் ஆஸ்தான வித்வான் ஏ.எம்.ராஜகோபாலன் தலைமையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தேசிய பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் நல ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தொடக்கிவைத்தார். கல்லாறு அகத்தியர் ஞானபீட தலைவர் சரோஜினி மாதா, இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையன், திருப்பூர் மாலதி கோவிந்தராஜ், தாராபுரம் தேவகி வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கல்யாண வைபவத்தை திருக்கோட்டியூர் மாதவன் சுவாமிகள் நடத்திவைத்தார்.
சோடஷ மகாலட்சுமி மகா யாக சிறப்பு அஞ்சல் தலையை மேகாலய மாநில முன்னாள் ஆளுநர் வி.சண்முகநாதன், இந்திய அஞ்சல் துறை மேற்கு மண்டலத் தலைவர் அபிமன்யூ ஆகியோர் வெளியிட, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.
பின்னர் நடைபெற்ற, இரண்டாம் கால யாகத்துக்கு இந்து முன்னணி இணை ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார். இந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் ஜெகதீஷ் கரந்த், கேரள மாநில தலைவர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். யாகத்தை தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் என்.சேதுராமன் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.
இந்த விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் தொழில்முனைவோருக்கு ஜிஎஸ்டி விழிப்புணா்வு
தனியாா் சீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்: பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தல்

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு வரவேற்பு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


