மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
மின்சாரம் பாய்ந்ததில் திருப்பூரில் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.


மின்சாரம் பாய்ந்ததில் திருப்பூரில் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கிருஷ்ணாபுரம், ராஜா வீதியைச் சேர்ந்தவர் அன்பு மகன் தமிழ்கனி (19). இவர் திருப்பூர், தனலட்சுமி நகரில் தங்கி அங்குள்ள கிரில் பட்டறையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது தமிழ்கனி கதவு மீது வைத்திருந்த துணியை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, அருகிலுள்ள மின்கம்பியில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார். அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...