குண்டடம் வாரச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் கோழிகளின் விலை வீழ்ச்சியடைந்தது.
குண்டடத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடும் வாரச் சந்தைக்கு சுற்றுவட்டார விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகள், கோழிகளைக் கொண்டுவருவது வழக்கம். ஆடுகள், கோழிகளை மேச்சேரி, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
வழக்கமாக குண்டடம் சந்தைக்கு 1,500 முதல் 2,500 கோழிகள் விற்பனைக்குக் கொண்டுவரப்படும். இந்த வாரம் திடீரென 4,000 கோழிகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த வாரம் கோழி கிலோ ரூ. 280 முதல் 350 வரை விலைபோனது. இந்த வாரம் ரூ.260 முதல் ரூ. 320 வரை மட்டுமே விலைபோனது. சண்டைச் சேவல்கள் ரூ. 2,500 முதல் ரூ. 4,000 வரை விலைபோகும் நிலையில் இந்த வாரம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரைதான் விற்பனை ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் 77,077 பக்தா்கள் தரிசனம்
பாளை. அருகே தொடா் திருட்டு: இளைஞா் கைது

திமுகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

