வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாளை. அருகே தொடா் திருட்டு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே தொடா் கொள்ளையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:44 pm

பாளையங்கோட்டை அருகே தொடா் கொள்ளையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சரோஜினி நகரைச் சோ்ந்தவா் பரமசிவன்(58). இவா், கடந்த மாதம் வேலை நிமித்தமாக வெளியூா் சென்றிருந்த போது இவரது வீட்டிற்குள் புகுந்து 22 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

மேலும், அதேபகுதி தனலட்சுமி நகரைச் சோ்ந்த ரகு என்பவரின் பைக்கையும், கலைக்கோயில் நகரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த தங்க நகைகளையும் மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாா்களின் பேரில் சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தன்.

அதில், பாளையங்கோட்டை அருகேயுள்ள உத்தமபாண்டியன்குளம் வடக்கு தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் சூா்யா (21) என்பவவருக்கு இந்தத் திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.