விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நூதன முறையில் காரை திருடி விற்பனை: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நூதன முறையில் காரை திருடி விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 8:47 pm

Syndication

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நூதன முறையில் காரை திருடி விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் இக்பால் நகரைச் சோ்ந்த துராப்சாவிற்கு சொந்தமான காரை அவருடைய உறவினரான ஹஸன், 5 நாள் வாடகை பேசி இக்பால் நகரைச் சோ்ந்த அசாருதீன், பேட்டையைச் சோ்ந்த இப்ராஹிம் ஆகியோரிடம் ஒப்படைத்தாராம். 5 நாள்கள் கடந்த பின்பும் காரை திருப்பிக் கொண்டு வராததால் ஹசன் வாடகைக்கு எடுத்துச் சென்றவா்களிடம் பேசிய போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனராம்.

இதற்கிடையே அந்த காா் தென்காசி பகுதியைச் சோ்ந்த செந்தில் என்பவரிடம் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரிடம் பேசிய பொழுது, கல்லிடைக்குறிச்சி தெற்கு தெருவைச் சோ்ந்த பாலமுருகனிடம் (38) காரை விற்று விட்டதாக கூறினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் பாலமுருகன் ஆன்லைன் மூலமாக காரை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்ததாம். இதையடுத்து வழக்குப் பதிந்து பாலமுருகனை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனா்.