பழைய பேருந்து நிலைய மேம்பாலப் பணி: எம்எல்ஏ ஆய்வு
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றுவரும் மேம்பாலப் பணிகளை திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.


திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றுவரும் மேம்பாலப் பணிகளை திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே 671 மீட்டர் நீளத்தில் 16 கண்கள் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனோடு, அணுகுசாலை, வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பாலம் அமைக்கும் பணிகளால் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலப் பணிகளை திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், முதற்கட்டமாக அணுகு சாலைப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் 1957 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, பக்கச் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அரசு மருத்துவமனை கட்டுமானங்களை இடிக்கும் பணிகளை விரைவாக முடித்து, 10 நாள்களுக்குள் சாலைகளை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதோடு, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை சந்திப்பு பகுதியில் தரைப்பாலப் பணி, அணுகு சாலை அமைக்க மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே வரும் வடக்குப் பகுதி நுழைவாயில் ஆகியவற்றையும் ஆய்வு செய்து, காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் சாலை இடிபாடுகள், குழிகளை சமப்படுத்தி வாகனங்கள் செல்ல வழிவகை ஏற்படுத்தவும், அனைத்துப் பணிகளையும் விரைவாக முடிக்கவும் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மேம்பாலத்தை ஒட்டியுள்ள முத்துப்புதூர் மாநகராட்சிப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிவறை, வகுப்பறைகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் செந்தில்குமார், ராஜேஷ்கண்ணன், பொதுப் பணித் துறை பொறியாளர் கோவிந்தராஜ், இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் ஹர்சினி, மாநகராட்சி பொறியாளர்கள் ரவி, உதவி ஆணையர் ஷபியுல்லா, அதிமுக நிர்வாகிகள் பி.கே.எஸ்.சடையப்பன், கண்ணபிரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...