ரூ.9.28 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.28 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏல விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.


வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.28 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏல விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுகிறது. இந்த வார ஏலத்துக்கு, மொத்தம் 9,278 கிலோ தேங்காய் பருப்பு வரத்து இருந்தது. அதிகபட்ச விலையாக கிலோ ரூ.127.85-க்கும், குறைந்தபட்சம் ரூ. 48.75-க்கும் ஏலம் போனது.
ஏலத்தில், கரூர், மூலனூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30 விவசாயிகளும், காங்கயம், கொடுமுடி, முத்தூர் பகுதியிலிருந்து 9 வணிகர்களும் பங்கேற்றனர்.
விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.9.28 லட்சம் விவசாயிகளுக்கு மின்னணு பரிவர்த்தனை மூலம் பட்டுவாடா செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...