திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் புதிய முயற்சியாக வளர்ந்த தென்னை மரங்களை மறு நடவு செய்வது பரவி வருகிறது.
திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் இந்தப் புதிய முறைக்கு வரவேற்பு உள்ளது. தென்னங் கன்றுகளை வைத்தால், அவை வளர்ந்து பலன் கொடுக்க 3 முதல் 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் 10 வருடங்களுக்கும் மேலாகக் காய்த்து வரும் மரங்களைக் கூட வேரோடு பிடுங்கி, வேறொரு இடத்தில் நட்டு சில மாதங்களில் வழக்கமான பயன்களைப் பெற முடிகிறது.
நெட்டை, குட்டை, கலப்பினம் ஆகிய 3 ரகங்கள் பிரதானமாக உள்ளன. தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாகப் பல இடங்களில் தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. தென்னை மரங்களை வெட்டி அந்த இடங்களில் புதிதாகக் கட்டுமானப் பணிகளும் நடைபெற வேண்டியுள்ளது.
இது போன்ற சமயங்களில் அங்கிருக்கும் 30 அடிக்கும் உயரமான தென்னை மரங்களைக் கூட, அப்படியே பிடுங்கி தேவைப்படும் வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று ஆழமான குழிகளில் நட்டு வைத்துப் பராமரிப்புச் செய்யப்படுகிறது. அவையும் நல்ல முறையில் வளர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது. பல கிளைகளையுடைய பெரிய வேப்ப மரங்கள், அரச மரங்கள், ஆல மரங்களை அதன் கிளைகளை வெட்டி விட்டு வேறு இடங்களில் மறு நடவு செய்யப்படுவது ஏற்கெனவே நடந்து வருகிறது. ஆனால் தென்னை மரங்களுக்கு இது புதிய முயற்சியாகும்.
இவ்வாறு கரூர் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு தென்னை மரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. தென்னை மறு நடவுக்கு மிக
அதிக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

