தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட வனக் காப்பாளர், இந்து அறநிலையத் துறை காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை முதல் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் தற்போது 726 வனக் காப்பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணிக் காலியிடங்களை நிரப்ப அக்டோபர் 6ஆம் தேதிஅறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் வனக் காப்பாளர் பதவிற்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்து அறநிலையத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு டிசம்பர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை (நவம்பர் 14) காலை 10 மணி முதல் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வகுப்பில் முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள், தேர்வுக்கான பாடக் குறிப்புகள் வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் மாதிரித் தேர்வும் நடத்தப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்து போராட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

