ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அரசுப் பேருந்து மோதி பிகார் இளைஞர் சாவு

திருப்பூரில் அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பிகார் மாநில இளைஞர் உயிரிழந்தார்.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:51 am IST

திருப்பூரில் அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பிகார் மாநில இளைஞர் உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், காசிபாளையம் சாலை ஈஸ்வரன் கோயில் அருகே திங்கள்கிழமை இரவு  ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடை அருகில் இந்த இரு சக்கர வாகனம் மீது திருப்பூரில் இருந்து சிட்கோ நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்ற பிகார் மாநிலத்தைச் சேர்ந்த என்.அனில்குமார் (24) உயிரிழந்தார்.  அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய்பர்வின் (23) காயமடைந்தார். 
இது குறித்து திருப்பூர் ஊரக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கி விபத்தை  ஏற்படுத்தி பிரேம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.