உடுமலையில் அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை மக்கள் பேரவை நிர்வாகிகள் கூட்டம் இந்திய மருத்துவச் சங்க கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவர் யு.கே.பி. முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். தொழிலதிபர் ஜி.ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில், ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் கிழபுறம் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலமாக ரவுண்டானா அமைக்க வேண்டும். திருவனந்தபுரம்-மதுரை இடையிலான அமிர்தா விரைவு ரயில் உடுமலையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் வழக்குரைஞர் சோமசுந்தரம், டாக்டர் சிவசண்முகம், சுந்தரராஜன், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெட்டாவில் ஆள்குறைப்பு நடவடிக்கை: ஊழியர்களுக்கு அதிகாலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் - பின்னணியில் என்ன?

மனித உரிமை செயல்பாட்டாளர்களை மண்டியிடச் செய்த இஸ்ரேல் அமைச்சர்: வலுக்கும் கண்டனம்!

இன்றைய செய்திகள்! - நேரலை

அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: காங்கிரஸ்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


