திருப்பூர், குமார் நகர் கிளை நூலக வாசகர் வட்ட அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர், குமார் நகர் கிளை நூலக வாசகர் வட்ட அமைப்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்து நூலகர் நடராஜன் பேசியதாவது: நூலகங்கள் ஒவ்வொன்றும் கோயில் பேன்றவையாகும். இன்றைய இயந்திய வாழ்க்கையில் மனிதனின் சிந்தனைகளை நூலகங்கள்தான் ஆசுவாசப்படுத்துகின்றன. நூலகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ், நீட் போன்றவற்றியில் பயிற்சி பெற சிறந்த நூல்கள் உள்ளன. இந்த நூல்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கிளை நூலக வாசகர் வட்டத்துக்கு பிஷப் உபகாரசாமி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆரோக்கியசாமி தலைவராகவும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 10 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. எழுத்தாளர்கள் துருவன் பாலா, துசோ பிரபாகர், கா.ஜோதி, கலால் துணை ஆணையர் பாலசுப்ரமணியன், புவனேசுவரி, நூலகர் லீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வாசகர் வட்டக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னொளியில் ஜொலிக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு

வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் காப்புகாட்டில் விடுவிப்பு

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
