ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

உடுமலை அண்ணா குடியிருப்பு பூங்காவைச் சீரமைக்க வலியுறுத்தல்

உடுமலையில் அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 9:44 am IST

உடுமலையில் அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை மக்கள் பேரவை நிர்வாகிகள் கூட்டம் இந்திய மருத்துவச் சங்க கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  தலைவர் யு.கே.பி. முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். தொழிலதிபர் ஜி.ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில், ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும். 
உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் கிழபுறம் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலமாக ரவுண்டானா அமைக்க வேண்டும். திருவனந்தபுரம்-மதுரை இடையிலான  அமிர்தா விரைவு ரயில் உடுமலையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா குடியிருப்புப் பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிர்வாகிகள் வழக்குரைஞர் சோமசுந்தரம், டாக்டர் சிவசண்முகம், சுந்தரராஜன், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.