ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

நூலக வாசகர் வட்ட அமைப்புக் கூட்டம்

திருப்பூர், குமார் நகர் கிளை நூலக வாசகர் வட்ட அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 9:45 am IST

திருப்பூர், குமார் நகர் கிளை நூலக வாசகர் வட்ட அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர், குமார் நகர் கிளை நூலக வாசகர் வட்ட அமைப்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்து நூலகர் நடராஜன்  பேசியதாவது:  நூலகங்கள் ஒவ்வொன்றும் கோயில் பேன்றவையாகும். இன்றைய இயந்திய வாழ்க்கையில் மனிதனின் சிந்தனைகளை நூலகங்கள்தான் ஆசுவாசப்படுத்துகின்றன. நூலகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ், நீட் போன்றவற்றியில் பயிற்சி பெற சிறந்த நூல்கள் உள்ளன. இந்த நூல்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கிளை நூலக வாசகர் வட்டத்துக்கு பிஷப் உபகாரசாமி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆரோக்கியசாமி தலைவராகவும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 10 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. எழுத்தாளர்கள் துருவன் பாலா, துசோ பிரபாகர், கா.ஜோதி, கலால் துணை ஆணையர் பாலசுப்ரமணியன், புவனேசுவரி, நூலகர் லீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வாசகர் வட்டக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.