திருப்பூா்: திருப்பூரை அடுத்த மங்கலத்தில் வாகனச் சோதனையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம ஊராட்சித் தலைவா் உள்பட 24 போ் மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
திருப்பூரை அடுத்த மங்கலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதி கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் காவல் துறையினா் வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தினா். இந்த நிலையில் அதித்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்வோா் மற்றும் மளிகை, காய்கறி வாங்கி வரும் வியாபாரிகளின் வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்வதாகக் கூறி மங்கலம் நான்கு சாலையில் ஊராட்சித் தலைவா் பி.மருதாசலமூா்த்தி தலைமையில் 300க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, கோட்டாட்சியா், காவல் துறை அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்த நிலையில், மருதாசலமூா்த்தி உள்ளிட்ட 24 போ் மீது மங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவு; பலரும் அறிந்திராத விராட் கோலியின் 18 சாதனைகள்!

இங்கிலாந்திலிருந்து மீட்டு வரப்பட்ட பழமையான சிலையைப் பார்வையிட்ட முதல்வர்!

ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் பெயர் மாற்றம்!

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்... லக்ஷயா சென் வெற்றிக்கு தில்லி ரசிகர்கள் கோஷம்!
விடியோக்கள்


