47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மூலனூரில் ரூ.1.96 கோடிக்கு பருத்தி விற்பனை 

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ.1.96 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. 

News image
Updated On :21 ஆகஸ்ட் 2020, 2:16 pm

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ.1.96 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. 

இந்த வார ஏலத்துக்கு திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 745 விவசாயிகள் தங்களுடைய பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 22 வணிகர்கள் வந்திருந்தனர். 

இந்திய பருத்தி கழகமும் கொள்முதல் செய்தது. சராசரி விலை குவிண்டால் ரூ.5,100 க்கு விற்பனையானது. வணிகர்கள் சராசரி விலை குவிண்டால் ரூ. 4,550 க்கு வாங்கினர். மொத்தம் 4,146 குவிண்டால் வரத்து இருந்தது. 

திருப்பூர் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தார். ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் தர்மராஜ், மகுடேஸ்வரன் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.