போத்தம்பாளையம் ஊராட்சியில் தொழில் பூங்காவிற்கு நிலம் ஒதுக்கக் கூடாது: விவசாய சங்கத்தினர்
போத்தம்பாளையம் ஊராட்சியில் தொழில் பூங்காவிற்கு நிலம் ஒதுக்கக் கூடாது என விவசாய சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.


போத்தம்பாளையம் ஊராட்சியில் தொழில் பூங்காவிற்கு நிலம் ஒதுக்கக் கூடாது என விவசாய சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் போத்தம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்டதத்தனூர் உள்ளிட்ட 3 ஊராட்சி பகுதிகளில் தொழில் பூங்கா அமைய விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் அருகாமை ஊராட்சியான போத்தம்பாளையம் ஊராட்சியில் தொழில் பூங்காவிற்கு நிலம் ஒதுக்கக்கூடாது.
மேலும் ஒன்றிய பகுதியில் விவசாய பூமியை வேறு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. விவசாய சங்க மாவட்டத் தலைவர் மதுசூதனன், மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பி.முத்துசாமி, விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...