அவிநாசியில் திருமண மண்டப உரிமையாளர்கள் ஆலோசனை
அவிநாசி வட்டார திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீ செந்தூர் மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.


அவிநாசி வட்டார திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீ செந்தூர் மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பொண்ணுகுட்டி தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.கோவிந்தராஜன், பொருளாளர் எம்.பி.ஆர்.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காரோனா பொது முடக்கத் தளர்வுகளை அடுத்து, 2021 ஜனவரி முதல் நடைபெறும் திருமணங்களுக்கு முழு வாடகையையும் பெற்றுக் கொள்வது, மேலும் காரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும், தமிழக அரசுக்கு நன்றி, பாராட்டுத் தெரிவிப்பது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அவிநாசி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மண்டப உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...