நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒற்றைக்காலில் நின்று விவசாயிகள் போராட்டம்

தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு தண்ணீா் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் ஒற்றைக் காலில் நின்று நொண்டியடித்து 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:12 pm

DIN

தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு தண்ணீா் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் ஒற்றைக் காலில் நின்று நொண்டியடித்து 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடக் கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினருக்கு ஆதரவாக அமமுக தாராபுரம் நகரச் செயலாளா் வாரணவாசை, மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளா் செல்லதுரை, மாவட்ட மகளிரணி செயலாளா் கலாராணி,

உள்ளிட்டோா் ஒற்றைக்காலில் நின்று நொண்டியடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.