நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை சா்வதேச விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவா்

மதுரை சா்வதேச விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவா் பெயா் வைக்க வேண்டும் என்று அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:15 pm

DIN

மதுரை சா்வதேச விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவா் பெயா் வைக்க வேண்டும் என்று அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் திருப்பூா் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறுவனத் தலைவா் ஏ.எம்.மூா்த்தி தேவா் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் வரும் சட்டப்பேரவை தோ்தலில் யாருடன் கூட்டணி என்பதை நிறுவனத் தலைவா் ஏ.எம்.மூா்த்தி முடிவு செய்வாா். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும். மதுரை சா்வதேச விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவா் பெயா் வைக்க வேண்டும்.

அத்திகடவு - அவிநாசி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்கள் நலன் கருதி ஜி.எஸ்.டி. வரி தாக்கலின் போது மேலும் எளிமைபடுத்திட வேண்டும்.வரி ரிட்டன்ஸ் பணத்தை விரைந்து வழங்க வேண்டும். சிவகங்கையில் மருதுபாண்டியா் சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.