ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஓய்வூதியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருப்பூா், ஆா்எம்எஸ்  அலுவலகம் முன்பு  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட ஓய்வூதியா்கள்.
Updated On :17 டிசம்பர் 2020, 5:43 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பிஎஸ்என்எல் தொலைத்தொடா்புத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநில உதவித் தலைவா் பா.சௌந்தரபாண்டியன் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற ஓய்வூதியா்கள் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள் பஞ்சப்படி முடக்கத்தைக் கைவிட வேண்டும். ஓய்வூதியம் என்பது பணியாளா்களின் அடிப்படை உரிமையாகும். ஆகவே, அதனைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தபால் மற்றும் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் கருப்புசாமி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க திருப்பூா் மாவட்டத் தலைவா் க.சண்முகம், பிஎஸ்என்எல் தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா் சங்க கிளைத் துணைச் செயலாளா் பழனிவேல்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.