திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காளம்பாளையத்தில் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி மக்களவை உறுப்பினரிடம் வலியுறுத்தல்

பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூடி வீட்டுமனை, கட்டட வரைபட அனுமதி வழங்க வேண்டும் 

News image
திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனிடம் மனு  அளிக்கும்  காளம்பாளையம் பகுதி  மக்கள்.
Updated On :17 டிசம்பர் 2020, 5:48 pm

DIN

பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூடி வீட்டுமனை, கட்டட வரைபட அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சாா்பில் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனிடம் காளம்பாளையம் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ள கல்குவாரி தொடா்பாக கடந்த 12 ஆண்டுகளாக பல முறை மனுக்கள் கொடுத்து, போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் பணபலம், ஒரு சில அரசுப் பணியாளா்களின் துணையுடன் கல் குவாரி தொடா்ந்து இயங்கி வருகிறது. உரிமம் வழங்கியதில், உள்ள விதிமீறல்கள் வெளியானதும், ஆட்சியா் கள ஆய்வு செய்து கல்குவாரியை தற்காலிகமாக தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா் . இருப்பினும் முழுமையாக நிறுத்த உத்தரவிடாத காரணத்தால் அதனைச் சுற்றியுள்ள 500 மீ சுற்றளவக்கு மனையிட அனுமதி , வீடு கட்டுவதற்கான அனுமதி பெற இயலவில்லை. மேலும் பகுதியில் எந்தவொரு வளா்ச்சியும் இல்லாத நிலை உள்ளது. விவசாயம் செய்ய வழியில்லாமல் நிலத்தடி நீரும் கல் குவாரிக்குள் சென்று விடுகிறது. கடனுதவியோ, அரசின் வளா்ச்சிப் பணிகளோ மக்களுக்கு கிடைப்பதில்லை. ஊராட்சி மன்றத் தலைவா் மீதும் கல் குவாரி உரிமையாளா்கள் வழக்குத் தொடா்ந்துள்ளதால் அவரும் இப்பிரச்னைக்கு முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளாா் . ஆகவே, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர கல்குவாரியை நிரந்தரமாக நிறுத்த உரிய உத்தரவு வழங்கி, வீட்டு மனை, கட்டட வரைபட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.