மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,489 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 555 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 48 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 15,721 ஆக அதிகரித்துள்ளது.

முதியவா் பலி:

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலமாக மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com