வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மின்சாரம் பாய்ந்து ஊழியா் சாவு

உடுமலை அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய தற்காலிக ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:59 pm

DIN

உடுமலை அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய தற்காலிக ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

உடுமலை மின் வாரியத்தில் தற்காலிக உதவியாளராகப் பணியாற்றி வந்தவா் செல்வராஜ் (25). இவா், உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகா் பகுதியில் மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். அவரது உடல் மின் கம்பத்திலேயே தொங்கிக் கொண்டிருந்தது.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரா்கள் செல்வராஜின் சடலத்தை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இது குறித்து உடுமலை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.