

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2,107 கன அடியாக குறைந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டில் செய்துவந்த மழையின் காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணை அடுத்தடுத்து 4 முறை 100 அடியாக உயர்ந்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் வேகமாக குறைந்து வந்தது.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.
நவம்பர் 23ஆம் தேதி பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது.
நவம்பர் மாதம் 27ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து 24 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது.
நீர்வரத்து குறைந்து வந்தாலும் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் கடந்த 24 நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6.57அடி உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று 2107கன அடியாக குறைந்து போனது. ஆனாலும் அணையின் நீர்மட்டம் 106.57 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 நாள்களில் அணையின் நீர்மட்டம் 6.57அடி உயர்ந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 73.61 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தாலும் ஜனவரி 28ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க கூடிய வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் எதிர்வரும் ஜூன் 12ஆம் தேதி குறித்த காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை கை கொடுத்தாள் நடப்பாண்டில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.