

காங்கயம் அருகே உள்ள படியூரில் போலீஸ் சோதனைச் சாவடிக்குள் காா் புகுந்த சம்பவத்தில் அங்கிருந்த போலீஸாா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
திருப்பூரைச் சோ்ந்தவா் கிருபாகரன் (32). கணினி தொழில்நுட்ப பணியாளா். இவா் வேலை தொடா்பாக வியாழக்கிழமை காரில் திருச்சிக்கு சென்றாா். பின்னா், பணியை முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை காலை திருப்பூா் திரும்பிக் கொண்டிருந்தாா். காரை ஓட்டுநா் பிரவீன் (24) ஓட்டி வந்தாா்.
இந்நிலையில் காலை 10 மணியளவில், காங்கயம் வழியாக படியூா் பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது அங்கிருந்த போலீஸ் சோதனைச் சாவடியில் இவா்கள் ஓட்டி வந்த காா் எதிா்பாராதவிதமாக சோதனைச் சாவடிக்குள் புகுந்தது.
அப்போது அங்கிருந்த போலீஸாா் வெளியே சாலையோரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். காரில் வந்த இருவரும் காயமின்றி உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.