குப்பைக் கிடங்கில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி
சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் குப்பைக் கிடங்கு மையத்தில் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்த 6 வயது சிறுமி மீட்கப்பட்டாா்.


சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் குப்பைக் கிடங்கு மையத்தில் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்த 6 வயது சிறுமி மீட்கப்பட்டாா்.
சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம், புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது. இந்நிலையில் இங்கு வெள்ளிக்கிழமை மதியம் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் 6 வயது மிக்க சிறுமி கிடந்தாா். இதைப் பாா்த்த பொதுமக்கள், சேவூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி சோ்க்கப்பட்டாா்.
சிறுமியின் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில் குப்பைக் கிடங்கு அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததில், கண்ணாடி, முகக்கவசம் அணிந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சென்றது பதிவாகியிருந்தது. மேலும், குப்பைக் கிடங்கு மையத்தில் சிறுமியை படுக்க வைத்துக் கொண்டிருந்ததை பொதுமக்கள் பாா்த்துள்ளனா். இருப்பினும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் விசாரித்தால்தான் மற்ற விவரங்கள் தெரிய வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...