தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை துவக்கம்: முதல் நாளில் ரூ.16 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை விற்பனை துவங்கியது. முதல் நாளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 1:39 pm

DIN

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை விற்பனை துவங்கியது. முதல் நாளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.

காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை (டிச.28) முதல் திங்கள்கிழமை தோறும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல் நாளான திங்கள்கிழமை காங்கயம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 16 விவசாயிகள் 255 மூட்டை (12 ஆயிரத்து 750 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முத்தூர், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.

இங்கு நடைபெற்ற முதல நாள் ஏலத்தில் ரூ.16 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.125-க்கும், குறைந்த பட்சமாக ரூ.90-க்கும் சராசரியாக ரூ.124-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மகுடீஸ்வரன் செய்திருந்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.