காங்கயத்தில் ரூ.16 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை விற்பனை தொடங்கியது. முதல் நாளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான கொப்பரை ஏலம் போனது.


காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை விற்பனை தொடங்கியது. முதல் நாளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான கொப்பரை ஏலம் போனது.
காங்கயம் - கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் டிசம்பா் 28 முதல் திங்கள்கிழமை தோறும் தேங்காய் மற்றும் கொப்பரை மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முதல் நாளான திங்கள்கிழமை காங்கயம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த 16 விவசாயிகள் 255 மூட்டை (12 ஆயிரத்து 750 கிலோ) கொப்பரையை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். முத்தூா், காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 14 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா்.
முதல நாள் ஏலத்தில் ரூ.16 லட்சத்துக்கு கொப்பரை விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.125க்கும், குறைந்தபட்சமாக ரூ. 90க்கும் சராசரியாக ரூ.124க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...