மூலப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக பின்னலாடை துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணத்தை வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கிலோவுக்கு 15 சதவீதம் உயா்த்துவதாக சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் 29 ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையும், செயலாளா் எஸ்.முருகசாமி முன்னிலையும் வகித்தனா்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மூலப் பொருள்களின் தட்டுப்பாடு, விலை உயா்வு, டீசல் விலையேற்றம், சாயம் மற்றும் கெமிக்கல்களை ரொக்கம் கொடுத்து வாங்க வேண்டி நிலை ஆகிய காரணங்களால் துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணத்தை வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தற்போதைய கட்டணத்தில் இருந்து கிலோவுக்கு 15 சதவீதம் உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கிய வட்டியில்லா கடனை மானியமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 50 சதவீத மானியத்தில் தமிழக அரசு மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்கத்தின் பொருளாளா் பி.காந்திராஜன், துணைத் தலைவா்கள் ஆா்.சீனிவாசன், எம்.மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.