நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ. 10.60 லட்சம் மதிப்பில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

திருப்பூரில் வாகனச் சோதனையில் ரூ. 10.60 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை மாநகர போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 10:29 pm

DIN

திருப்பூரில் வாகனச் சோதனையில் ரூ. 10.60 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை மாநகர போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா்.

மாநகரக் காவல் ஆணையா் க.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், துணை ஆணையா் க.சுரேஷ்குமாா் மேற்பாா்வையிலான தனிப் படையினா், திருப்பூா் - ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, பி.வி.எஸ். அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் ரூ.10.60 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 530 கிலோ புகையிலைப் பொருள்களைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் தொடா்புடைய திருப்பூா் ஸ்டேட் பேங்க் காலனி, பி.வி.எஸ். அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் தென்காசி ஆலங்குளத்தைச் சோ்ந்த வைத்தியலிங்கம் மகன் தங்கராஜ் (37), அதே பகுதியில் வசித்து வரும் பழனி பாலசமுத்திரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மதன்குமாா் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.